2025 ஜூலை 09, புதன்கிழமை

3 பெண்கள் உட்பட 6 பேர் சேர்ந்து சிறுமியைக் கொன்றனர்

Editorial   / 2021 மார்ச் 24 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்கள் மூவர் உட்பட ஆறுபேர் இணைந்து 12 வயதான சிறுமியை அடித்து, காயப்படுத்தி, துன்புறுதி படுகொலைச் செய்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இந்த சம்பவம் களவாஞ்சிகுடி பெரியகல்லாறு பிரதேசத்திலேயே இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர்கள் அச்சிறுமியை அவ்வப்​போது அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

இதனால், உடம்பின் பல இடங்களில் சிறுமிக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த காயங்களின் ஊடாக கிருமித்தொற்றி, உடலுக்குள் புகுந்துவிட்டது. அத​னாலேயே இச்சிறுமி மரணித்துள்ளார் என  மரண பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .