2025 செப்டெம்பர் 03, புதன்கிழமை

3 வருட காதல்: தங்கையையே மிரட்டி வன்புணர்ந்த அண்ணன்

Editorial   / 2025 செப்டெம்பர் 03 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

குஜராத் மாநிலத்தின் பவநகர் மாவட்டத்தில், தலஜா நகரத்திற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில், 22 வயது இளம்பெண் ஒருவர், தனது பெற்றோர் மற்றும் , 29 வயதான  சகோதரருடனும் இணைந்து வாழ்ந்து வந்தார்.

இந்தச் சூழலில், கடந்த ஜூலை 13-ம் திகதி, அவரது சகோதரர், தன் மனைவி பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்த சமயத்தில், இளம்பெண்ணை கத்தி முனையில் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக, பொலிஸில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஆகஸ்ட் 22-ம் திகதி, மீண்டும் ஒருமுறை அத்துமீறல் நிகழ்ந்துள்ளது. மேலும், இளம் பெண்ணின் வலது தொடையில் பீடியை வைத்து சூடும் வைத்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தினால் மனவேதனையடைந்த அவர், பின்னர்  போலீசிடம் முறையிட்டார்.

பாதிக்கப்பட்ட இளம்பெண், கடந்த மூன்று ஆண்டுகளாக ஊரில் வசிக்கும் இளைஞரொருவருடன் காதல் தொடர்பில் இருந்ததாகவும், இந்தத் தகவல் அவரது சகோதரருக்கு முன்கூட்டியே தெரிந்திருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த தகவலை பயன்படுத்திக் கொண்டு, சகோதரர், தனது சகோதரியை காதலை கைவிடுமாறு கத்தி முனையில் மிரட்டி  பலாத்காரத்தில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

“குற்றத்திற்குப் பயன்படுத்திய கத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தின்போது குற்றவாளி அணிந்திருந்த ஆடைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இருவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு, வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்கு தொடர்பாக  தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .