2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

30 சதவீதமான மக்களின் மின் இணைப்புகள் துண்டிக்கப்படும் அபாயம்

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 08 , பி.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின்சாரக் கட்டணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்களினூடாக நாட்டில் 30 சதவீதமான மக்களுக்கான மின்சார இணைப்புகள் துண்டிக்கப்படும் நிலையை உருவாக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மின்சாரத்தை குறைந்தளவு பயன்படுத்துபவர்களுக்கு 100 சதவீத கட்டண அதிகரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

தற்போது ஓர் அலகு 2.50 ரூபாய் என்ற நிலையில் இது 6 ரூபாயாக அதிகரிக்கப்படவுள்ளது.

இவ்வாறு இரண்டு மடங்காக அதிகரிக்கப்படுவதன் மூலம் 30 சதவீதமானவர்கள் மின் கட்டணங்களை செலுத்த முடியாமல் போய் அவர்களது  மின்சாரம் துண்டிக்கப்படும் நிலை ஏற்படும் என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X