2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

இந்திய துணை ஜனாதிபதி வேட்பாளரானார் தமிழர்

Freelancer   / 2025 ஓகஸ்ட் 18 , மு.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.ஜ.க. கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்திய துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் உடல் நலனை கருத்தில் கொண்டு பதவி விலகுவதாக கடந்த மாதம் 21 ஆம் திகதி அறிவித்தார். அவரது இராஜினாமா உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதையடுத்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை தொடங்கியது. 

அதன்படி புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய செப்டம்பர் 9 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக (பா.ஜ.க.) கூட்டணி வேட்பாளரை எதிர்த்து போட்டியிடப் போவதாக இந்தியா கூட்டணி தலைவர்கள் அறிவித்துள்ளனர். எனவே துணை ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே நேரடி போட்டி உருவாகியது.

இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்ப்பில் யாரை வேட்பாளராக போட்டியிட தேர்வு செய்வது என்பது குறித்து முடிவெடுக்க நேற்று பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது.

அதன்படி துணை ஜனாதிபதி வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். சி.பி. ராதாகிருஷ்ணன் தற்போது மகாராஷ்டிர மாநில ஆளுநராக இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X