2025 ஜூலை 23, புதன்கிழமை

31 ஆண்டுகளின் பின்னர் விடுதலையானார் நளினி

Freelancer   / 2022 நவம்பர் 12 , பி.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த 6 பேரில் ஒருவரான நளினி ஸ்ரீஹரன், தமிழகத்தின் வேலூர் சிறையில் இருந்து இன்று (12) விடுதலை செய்யப்பட்டார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி உள்ளிட்ட 6 பேரை இந்திய உச்ச நீதிமன்றம் நேற்று (11) விடுதலை செய்தது.

குற்றவாளியாக இனங்காணப்பட்டு தண்டனை அனுபவித்த பேரறிவாளனை விடுவித்த அதன் முந்தைய உத்தரவு அவர்களுக்கும் பொருந்தும் என்று அறுவரும் விடுவிக்கப்பட்டனர்.

நான்கு இலங்கைப் பிரஜைகள் உட்பட ஆறு பேரையும் விடுதலை செய்வதற்கான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு நகல் கிடைத்ததைத் தொடர்ந்து, அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கையை சிறைச்சாலை அதிகாரிகள் முன்னெடுத்தனர்.

நளினியின் கணவர் வி. ஸ்ரீஹரன் என்கிற முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் இலங்கையர்கள் என்பதுடன், நளினி மற்றும் ஆர்.பி.ரவிச்சந்திரன் ஆகியோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .