2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

33 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

J.A. George   / 2021 மே 25 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 33 பேர் உயிரிழந்துள்ளதாக நேற்று(24) அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,243 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்று (24) அறிவிக்கப்பட்ட 33 மரணங்களுள் 5 பேரின் மரணங்கள் நேற்று (24) திங்கட்கிழமை பதிவாகியுள்ளதுடன், கடந்த 17 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 28 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளன.

அத்துடன், நேற்று பதிவான மரணங்களில், கினிமல்லகஹா பகுதியில் வசித்த 104 வயதான பெண் ஒருவரின் மரணமும் உள்ளடங்குகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .