Editorial / 2021 ஏப்ரல் 05 , மு.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாராளுமன்றம் இன்றிலிருந்து எதிர்வரும் 9 ஆம் திகதி வரையிலும் கூடவிருக்கிறது.
அதன்பின்னர், தமிழ்-சிங்கள புத்தாண்டு நிறைவடைந்ததன் பின்னர், மே மாதமளவிலேயே பாராளுமன்றம் கூடும்.
எனினும், கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, இவ்வாரத்துக்குள் ஒருநாள் பாராளுமன்றத்துக்கு சமூகமளித்தே ஆகவேண்டும். இல்லையேல் அவருடைய எம்.பி பதவி, தானாகவே இரத்துச் செய்யப்படும்.
பாராளுமன்ற அமர்வுகளில் விடுமுறையை எடுக்காமல், தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் பங்கேற்காவிடின், எம்.பி பதவி தானாகவே இரத்தாகிவிடும் என பாராளுமன்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ், ரஞ்சன் ராமநாயக்க எம்.பி, கடூழிய சிறைத்தண்டனையை அனுபவித்து வருகின்றார்.
அவருக்கு உயர்நீதிமன்றத்தால் கடந்த ஜனவரி 12ஆம் திகதியன்று, கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அதனடிப்படையில், ரஞ்சன் ராமநாயக்க எம்.பி, பாராளுமன்ற அமர்வுகளில் தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் பங்கேற்காமல் இருப்பது. ஏப்ரல் மாதம் 12ஆம் திகதியுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .