2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

50 பேர் தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள அவசர செய்தி

Freelancer   / 2022 ஓகஸ்ட் 20 , பி.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களின் போது அலரிமாளிகைக்குள் நுழைந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த 50 சந்தேகநபர்களை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்களின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் பொதுமக்கள் 011-2421867, 076-3477342 அல்லது 1997 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொள்ள முடியும் என பொலிஸார் தெரிவித்தனர். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .