Editorial / 2026 ஏப்ரல் 15 , பி.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

புத்தாண்டு தினத்தில் பொதுமக்களின் சுகாதாரத்திற்குப் பாதிப்பு ஏற்படும் வகையில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 57.5 கிலோ கிராம் எடையுள்ள அழுகிய கோழி இறைச்சியைப் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் கைப்பற்றி அழித்துள்ளனர்.
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொதுச்சுகாதாரப் பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில், புத்தாண்டு தினமான நேற்று திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது, ஒரு கோழி இறைச்சிக் கடையின் குளிர்சாதனப் பெட்டியில், நீண்ட நேரத்திற்கு முன் இறந்த கோழிகளின் இறைச்சி (அழுகிய நிலையில்) விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.
களுவாஞ்சிகுடி பிரிவுக்குப் பொறுப்பான பொதுச்சுகாதாரப் பரிசோதகர் த. கஜானன் தலைமையிலான குழுவினர், குறித்த இறைச்சியை உடனடியாகக் கைப்பற்றி அழித்தனர். இலாப நோக்கத்திற்காகப் பொதுமக்களின் உயிருடன் விளையாடும் வகையில் செயற்பட்ட அந்த வியாபாரிக்குக் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பண்டிகைக் காலத்தைப் பயன்படுத்தித் தரமற்ற உணவுகளை விற்பனை செய்பவர்களுக்கு எதிராகப் பொதுச்சுகாதாரப் பரிசோதகர் கஜானன் முன்னெடுத்து வரும் இத்தகைய நேர்மையான மற்றும் அதிரடி நடவடிக்கைகள் இப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளன.
"பண்டிகைக் காலங்களில் அதிக லாபம் ஈட்டும் நோக்கில் தரமற்ற அல்லது பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என களுவாஞ்சிகுடி பொதுச்சுகாதாரப் பிரிவினர் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
6 hours ago
8 hours ago
9 hours ago
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago
17 Apr 2026