2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

60 மில்லியன் டொலர்கள் வழங்குவதாக உறுதி

Freelancer   / 2022 செப்டெம்பர் 11 , பி.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு மேலும் 60 மில்லியன் டொலர்களை உதவியாக வழங்குவதாக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் நிர்வாகி சமந்தா பவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் குறிப்பிட்டார்.

நேற்றையதினம் அறிவிக்கப்பட்ட 40 மில்லியன் டொலர்களுக்கு மேலதிகமாக 20 மில்லியன் டொலர்கள் வழங்கப்படும் என்று குறிப்பிட்டார்.

இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் அவசர மற்றும் இடைநிலைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் ஸ்திரநிலைக்குத் திரும்புவதற்கும் ஆதரவளிக்க அமெரிக்கா அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .