J.A. George / 2021 ஓகஸ்ட் 11 , மு.ப. 09:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேல் மாகாணத்தில் உள்ளவர்களில் இதுவரை தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டம் இன்று (11) ஆரம்பிக்கப்படுகின்றது.
இன்று முதல் மூன்று நாட்களுக்கு 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
அத்துடன், இதுவரை தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத 60 வயதுக்கும் மேற்பட்டோரின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவ்வாறானவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்படும் நாள், இடம் மற்றும் நேரம் ஆகியன அலைபேசிக்கு குறுந்தகவல் (SMS) ஊடாக அறிவிக்கப்படவுள்ளது.
இதனடிப்படையில், கொழும்பு மாவட்டத்தில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கம்பஹா – பொது வைத்தியசாலையில் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
மேலும், களுத்துறை மாவட்டத்தில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாளைய தினம் (12) மாத்திரம், களுத்துறை பொது வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
1 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago