Freelancer / 2021 ஓகஸ்ட் 29 , பி.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் மொத்த சனத் தொகையில் 7 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று (29) வரையான காலப்பகுதியில் வழங்கப்பட்ட இரண்டு கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 704,2418 ஆகும். இது 30 வயதுக்கு மேற்பட்ட மொத்த மக்கள் தொகையில் 61% என குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது சுமார் 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு, ஆடைத் தொழில் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ளனர் என்று தொற்றுநோயியல் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு வந்த 2,865 சீன நாட்டவர்கள் கொரோனா முதல் டோஸையும், 2,435 பேர் இரண்டாவது டோஸையும் பெற்றுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .