Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Simrith / 2023 ஜூலை 13 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது சொந்த மகளை அடித்து துன்புறுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு பதினேழு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதியில் பத்து வயதுடைய சிறுமி ஒருவரை கடந்த 2013 ஆம் ஆண்டு அடித்து துன்புறுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் குறித்த சிறுமியின் தந்தையான 78 வயதுடைய முதியவர் விசாரணைகள் மூலம் குற்றவாளியாக இனங்காணப்பட்டு நேற்று புதன்கிழமை (12) கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கானது நேற்றைய தினம் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.ஏ சகாப்தீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
கடந்த 2013 ஆம் ஆண்டு தனது 10 வயதுடைய மகளை அடித்து துன்புறுத்தி, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற சிறுமியின் வாக்கு மூலம், சாட்சியங்கள் மற்றும் சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கை என்பவற்றின் மூலம் நீதிமன்றம் குறித்த முதியவரை குற்றவாளியாக இனங்கண்டு மேற்படி தீர்ப்பை வழங்கியுள்ளது.
இவ்வாறு தனது சொந்த மகளை அடித்து துன்புறுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்த 78 வயதுடைய தந்தைக்கு பதினேழு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுதுடன் ,பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் தவறும் பட்சத்தில் 12 மாத கால சாதாரண சிறைத்தண்டனையும் விதித்து கிளிநொச்சி மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
41 minute ago
52 minute ago
58 minute ago