Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 ஜனவரி 16 , மு.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
யொஹான் பெரேரா
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான வரட்சியை எதிர்கொள்ளும் நோக்கிலும் மின்பாவனையைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும், அரச அலுவலகங்களிலுள்ள வளி பதனப்படுத்தியின் (A/C)பாவனையை, அலுவலகர்கள் குறைத்துக்கொள்ளுமாறு கோரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுற்றறிக்கையொன்றை வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சுற்றறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் அந்தச் சுற்றறிக்கையின் பிரகாரம், அரச ஊழியர்கள், வளி பதனப்படுத்தியை 26 பாகை செல்சியஸுக்கு மேல் வைத்து பயன்படுத்துமாறும் குறிப்பிடப்படும் என்றும், எரிபொருள் மற்றும் சக்தி பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். ஒரு கட்டடத்துக்கு வைக்கப்படும் வளி பதனப்படுத்தியின் அளவு, 2, 21 மற்றும் 20 பாகை செல்சியஸுக்கு வைக்கப்படும் போதே, அதிகளவு மின் விரயமாவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, நீர்த்தேக்கங்களிலுள்ள நீரின் அளவும் குறைந்துள்ளமையால், மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான நீரின் அளவைக் குறைப்பதற்கு அரச மின்சக்தி நிலையங்கள் தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார். ‘பருவப்பெயர்ச்சி மழைக்காலம் வரவுள்ளமையால். எதிர்வரும் மார்ச் மாதம் வரைக்கும், மின்தடைகளை ஏற்படுத்தாது இருப்பதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம். ஆனால், எதிர்பார்ப்பையும் தாண்டி, பருவப்பெயர்ச்சி மழை வராது போனால், மேலதிக தீர்மானத்தை மேற்கொள்வோம்’ என்று அவர் குறிப்பிட்டார்.
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago