2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

CIDஇல் Milco தலைவர்

Freelancer   / 2022 செப்டெம்பர் 19 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பேவெல பால் தொழிற்சாலையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் எரிபொருள் மோசடி  தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று (19) முறைப்பாடு செய்யவுள்ளதாக Milco (Pvt) Ltd இன் தலைவர் ரேணுகா பெரேரா தெரிவித்துள்ளார்.

2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சுமார் 132,000 லீட்டர் டீசல் மோசடியான முறையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மோசடியில் ஈடுபட்ட அதிகாரி மற்றும் அதனை மேற்பார்வையிட்ட அதிகாரியை பணி இடைநிறுத்தம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும்  ரேணுகா பெரேரா தெரிவித்தார்.

மேலும், உரிய தகவல்களை பதிவு செய்யாத சம்பந்தப்பட்ட துறை அதிகாரியை இடமாற்றம் செய்யவும் முடிவு செய்யப்பட்டது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .