2025 ஜூலை 09, புதன்கிழமை

‘அசம்பாவிதங்கள் ஏற்படாததால் அரசியல் தலைவர்களுக்கு நன்றி’

Editorial   / 2018 நவம்பர் 14 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இம்முறை அரசியல் மாற்றங்களின் போது, அரச நிறுவனங்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்ட சம்பவங்கள் பதிவாகவில்லை. ஆனால் 2000ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் தேர்தல் நிறைவுற்றதும் பல அசம்பாவிதங்கள் இடம்பெற்றன. ஆனால் இம்முறை அவ்வாறான அசம்பாவிதங்கள் ஏற்படாமைக்கு அரசியல் தலைவர்களுக்கு நாம் நன்றி கூறுகின்​றோம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர்,

நாடாளுமன்றத்தைக் கலைத்தமைத் தொடர்பில், அரசமைப்பில் முரண்பாடுகள் காண்படுமாயின் அது குறித்து உயர்நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை நடைமுறைப்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .