Editorial / 2021 பெப்ரவரி 15 , மு.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களை அடக்கம், தகனம் செய்வது குறித்து, தான் உள்ளிட்ட குழுவினர் அனுமதி வழங்கியதாகத் தெரிவித்த சிரேஸ்ட பேராசிரியை ஜெனிபர் பெரேராஇ தமது குழுவின் அறிக்கை, அவசரமாகக் கேட்கப்பட்டதால், கூடிய விரைவில் அந்த அறிக்கையை வழங்க நடவடிக்கை எடுத்தோம் என்றார்.
சிரேஸ்ட பேராசிரியை ஜெனிபர் பெரேரா, கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் இறுதிக் கிரியைகள் குறித்து, பரிந்துரைகளை முன்வைப்பதற்காக சுகாதார அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்ட நிபுணர்களின் குழுவின் தலைவராவார்.
தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
தான் உள்ளிட்ட ஒன்பது பேரைக் கொண்ட குழு, கடந்தாண்டு டிசெம்பர் 24 நியமிக்கப்பட்டது. அக்குழுவின் அறிக்கை, டிசெம்பர் 28 கையளிக்கப்பட்டது எனத் தெரிவித்த அவர், தகனத்தைப் போலவே அடக்கத்துக்கும் அனுமதி வழங்கியதாகவும் அடக்கும் செய்யும் போது,பின்பற்ற வேண்டிய பரிந்துரைகள் சில அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன என்றார்.
அதற்கமைய,
1. சடலத்தை அடக்கம் செய்வதாயின், உரிய அதிகாரிகளாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். அவர் அதனைக் கண்காணிக்க வேண்டும்.
2. அடக்கம் செய்யப்படும் உடலை (எம்பம் பண்ண), வீட்டுக்குக் கொண்டு செல்லவோ அனுமதி வழங்கப்படாது.
3. உயிரிழந்த 24 மணி நேரத்துக்குள் அடக்கம் அல்லது தகனம் செய்யப்பட வேண்டும்.
4. குடும்ப உறவினர்கள் நால்வருக்கும், பாதுகாப்பான தூரத்தில் இருந்து 5 நிமிடத்துக்கு சடலத்தை பார்க்க அனுமதி வழங்கல்
5. அடக்கம் செய்வதாயின், நிலக்கீழ் நீரில் கலக்காத வகையில் இரண்டு பொதிகளால் அந்தச் சடலத்தைச் சுற்றி, சவப்பெட்டியில் வைத்தல் வேண்டும்.
6. அடக்கம் அல்லது தகனம் செய்யப்படும் இடங்களுக்கு மதத் தலைவர்கள் சென்று, சமய நிகழ்வுகளை முன்னெடுக்க அனுமதித்தல்
7. சவப்பெட்டியை எக்காரணத்தைக் கொண்டும் திறக்கக்கூடாது போன்ற நிபந்தனைகளைத் தமது குழு முன்வைத்ததாகத் தெரிவித்துள்ளார்.
8. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்யும் போது, தொற்று நிலக்கீழ் நீரில் கலக்குமா என்பது தொடர்பில் ஆய்வுகள் நடத்தப்பட்டதா என இதன்போது வினவப்பட்டது.
அதற்குப் பதிலளித்த பேராசிரியர், அவ்வாறானதோர் ஆய்வு இலங்கையில் செய்யப்படவில்லை என்றும், வெளிநாடுகளில் செய்யப்பட்ட ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு, நிபுணர்களின் அறிக்கை வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன்போது அந்த அறிக்கைக்கு என்ன நடந்தது? ஏன் சுகாதார அமைச்சு அதனை பகிரங்கப்படுத்தவில்லை?
இதற்குச் சரியாகப் பதிலளிக்க முடியாது. அத்துடன், அந்தக் குழுவில் தன்னைத் தவிர, ஏனைய அனைவரும் சுகாதார அமைச்சுடன் தொடர்புடையவர்கள் என்பதால், அந்த அறிக்கைக்கு என்ன நடந்தது எனத் தன்னால் எவ்வாறு கேட்க முடியும் என்றார். இந்த அறிக்கை கையளிக்கப்பட்டதன் பின்னர், தங்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்ததா?
'வந்தது; ஆனால், நான் பதிலளிக்க செல்லவில்லை' என பேராசிரியர் ஜெனிபர் பெரேரா தெரிவித்துள்ளார்.
31 minute ago
43 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
43 minute ago
1 hours ago