2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட முகவர்கள் இன்று வேலைநிறுத்தம்

Niroshini   / 2017 ஜனவரி 16 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிர்ஷ்ட இலாபச் சீட்டுகளை கொள்வனது செய்யும் முகவர்கள், நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இன்று குதிக்கவுள்ளதாக அரசாங்கத்தை எச்சரித்துள்ளனர்.

30 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ள அதிர்ஷ்ட இலாபச்சீட்டின் விலையை 20 ரூபாயாகக் குறைக்குமாறு வலியுறுத்தியே, இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக அதிர்ஷ்ட இலாபச்சீட்டு முகவர் சங்கம் அறிவித்துள்ளது.   

அதிர்ஷ்ட இலாபச்சீட்டின் விலை, 20 ரூபாயிலிருந்து 30 ரூபாயாக, 10 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டமையால், அதிர்ஷ்ட இலாபச்சீட்டின் விற்பனை, 40 சதவீதத்தினால் குறைந்துள்ளது என்று, அகில இலங்கை அதிர்ஷ்ட இலாபச்சீட்டு விற்பனைப் பிரதிநிதிகளின் சங்கம் தெரிவித்திருந்தது.   

இதனால், அதிர்ஷ்ட இலாபச்சீட்டு விற்பனையில் வாழ்க்கை நடத்திய விற்பனை பிரதிநிதிகள் மற்றும் விற்பனை உதவியாளர்கள் என, 40 ஆயிரத்துக்கும் அண்மித்தோர், பாரிய சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் அந்தச் சங்கத்தின் தலைவர் கிரிஷாந்த மாரபே தெரிவித்தார்.   

இவ்வாறான நிலைமை தொடருமாயின், தங்களுடைய சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும், அதிர்ஷ்ட இலாபச்சீட்டுகளை விற்பனை செய்வதிலிருந்து விலகி நிற்கபோவதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .