Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 செப்டெம்பர் 26 , பி.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு மாவட்டத்துக்குள் அதியுயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்தி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றில் இன்று (26) அடிப்படை உரிமைகள் மீறல் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பு மாவட்டத்தில் பல பகுதிகளை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தி வெள்ளிக்கிழமை (23) அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தார்.
அதனை சவாலுக்கு உட்படுத்தியே சோசலிச இளைஞர் சங்கத்தின் செயற்பாட்டாளரால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொலிஸ்மா அதிபர் அல்லது பிரதிப் பொலிஸ்மா அதிபரின் முன்அனுமதியின்றி குறித்த அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் கூட்டங்கள் அல்லது ஊர்வலங்களை நடத்த முடியாது என வர்த்தமானியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாராளுமன்ற வளாகம், உயர் நீதிமன்ற வளாகம், மேல் நீதிமன்ற வளாகம், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற வளாகம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, இலங்கை கடற்படைத் தலைமையகம், பொலிஸ் தலைமையகம், பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கை இராணுவத் தலைமையகம் அக்குரேகொட, கொம்பனித் தெரு விமானப் படைத் தலைமையகம் மற்றும் பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகம் ஆகியவை அதியுயர் பாதுகாப்பு வலயங்காகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
5 hours ago