Editorial / 2025 ஜூலை 13 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருமணம் சொர்க்கத்தில் நிச்சைக்கப்படும் என்பார்கள். ஆனால், அத்தை மகளை திருமணம் செய்தததால் காதல் ஜோடிக்கு நூதனமான தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டம் கஞ்சமஜ்ஹிரா கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண், தனது சொந்த அத்தை மகனை (தந்தையின் சகோதரி மகன்) காதலித்து திருமணம் செய்துள்ளார். ஒடிசா வழக்கப்படி அத்தை மகன், மகளை திருமணம் செய்வது சமூக வழக்கத்துக்கு எதிரானது.
இதனால் அவர்களுக்கு தண்டனை வழங்க கிராமத்தினர் முடிவு செய்தனர். காதல் ஜோடியை வயலுக்கு அழைத்துச் சென்ற கிராமத்தினர், அவர்களை மாடு போல் ஏரில் பூட்டி நிலத்தை உழச் செய்தனர். அவர்களை ஒருவர் பிரம்பால் அடித்தபடி நிலத்தை உழச் செய்தார்.
அதன்பின் அவர்கள் கிராம கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பாவத்தை போக்குவதற்கான சடங்குகளை செய்ய வைத்தனர். இந்த வீடியோ வைரலாக பரவியதால் கண்டனம் எழுந்துள்ளது.
நூதன தண்டனை வழங்கிய கிராமத்தினர் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்யவுள்ளனர்.
15 minute ago
8 hours ago
08 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
8 hours ago
08 Feb 2026