Editorial / 2020 ஜூலை 13 , பி.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரண்டு ரீட் மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று(13) தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
அவன் கார்ட் மெரிடைம் சர்விசர்ஸ் தனியார் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி முன்வைத்துள்ள முறைப்பாட்டுக்கு அமைய அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணைகளை தேடியறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க வருமாரு தமக்கு விடுக்கப்பட்டுள்ள நோட்டீசை வலுவற்றதாக செய்யுமாறு கோரிக்கை விடுத்து அநுரகுமார திசாநாயக்க மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இதேவேளை, குறித்த ஆணைக்குழுவில் எதிர்வரும் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு தனக்கு விடுக்கப்பட்டுள்ள நோட்டீசை வலுவற்றதாக செய்யுமாறு கோரிக்கை விடுத்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றுமொரு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
14 minute ago
19 minute ago
27 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
19 minute ago
27 minute ago
33 minute ago