2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

அனுமதிப்பத்திரமின்றி மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது

Editorial   / 2019 பெப்ரவரி 26 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா , இரட்டைக்குளம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் இருவரை பொலிஸார் நேற்று (25) கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார், சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரங்கள் ஏதுமின்றி மணல் அகழ்வில் ஈடுபட்டுகொண்டிருந்த இருவரையும் கைது செய்ததாக தெரிவித்தனர்.

அத்துடன் குறித்த சந்தேகநபர்கள் மணல் அகழ்வுக்காக பயன்படுத்திய டிப்பர் மற்றும் பெக்கோ இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்த பொலிஸார், குறித்த சந்தேகநபர்கள் இருவரையும் இன்று (26) வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .