Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 பெப்ரவரி 14 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.செல்வராஜா
விபத்தில் படுகாயமடைந்து கவலைக்கிடமாக இருந்த மாணவனை, மேலதிக சிகிச்சைக்காக இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸில் அழைத்துச் செல்லும்படி பெற்றோருக்கு, வைத்தியர் உத்தரவிட்ட சம்பவமொன்று, மொனராகலை, சியாம்பலாண்டுவைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அப்பகுதியிலுள்ள கந்தவுடபங்குவ மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 18 வயதான மாணவன், மோட்டார் சைக்கிளுடன் மோதி, படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
அம்மாணவனை, சியாம்பலாண்டுவை அரசினர் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று சிகிச்சையளிக்கப்பட்டபோதும் மாணவனின் நிலை கவலைக்கிடமாக இருந்ததால், அவரை உடனடியாக மொனராகலை அரசினர் வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லும்படி மாணவனின் பெற்றோரிடம், வைத்திய அதிகாரி உத்தரவிட்டார்.
இங்கிருந்து மொனராகலைக்கு அடிக்கடி இ.போ.ச பஸ்கள் இருப்பதால், பஸ்ஸொன்றில் மாணவனைக் கூட்டிச் செல்லுமாறும் வைத்திய அதிகாரி கூறியுள்ளார்.
இதனையடுத்து, கவலைக்கிடமாக இருந்த மாணவனை, இ.போ.ச பஸ் மூலம், வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர். மாணவன் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சியாம்பலாண்டுவை வைத்தியசாலையில் அம்பியூலன்ஸொன்று இருந்தும், குறிப்பிட்ட நோயாளியை எடுத்துச்செல்ல அம்பியூலன்ஸ் வழங்காமை குறித்து வினவியபோது, ஒரு நோயாளிக்காக அம்பியூலன்ஸ் வழங்க முடியாமலிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாணவனின் பெற்றோர், சுகாதார அமைச்சருக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.
5 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
8 hours ago