2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

அமைச்சரவையில் இன்று அறிக்கை சமர்ப்பிப்பு

J.A. George   / 2021 பெப்ரவரி 15 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை அமைச்சரவையில்  இன்று (15) சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கடந்த முதலாம் திகதி கையளிக்கப்பட்டிருந்தது.

இந்த ஆணைக்குழுவானது, சுமார் ஒன்றரை ஆண்டுகளாக 457 பேரிடம் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சாட்சியம் பதிவு செய்திருந்தது.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நாட்டில் மூன்று தேவாலயங்கள் உள்ளிட்ட எட்டு இடங்களில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .