2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

அரசாங்க வங்கியில் 5.7 மில்லியன் ரூபாய் கொள்ளை

Princiya Dixci   / 2017 ஜனவரி 22 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

வங்கிக் கடத்தில் பொறுத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கமெரா தொகுதியையே முற்றுமுழுதாக மாற்றிவிட்டு, அவ்வங்கியின் தன்னியக்க பணப்பரிமாற்றும் (ஏ.டி.எம்) இயந்திரத்திலிருந்து 57 இலட்சத்து 75 ஆயிரத்து 800 ரூபாவை கொள்ளையிட்டுள்ள சம்பவமொன்று, மொனராகலை - மெதகம நகரத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,

மெதகம நகரத்தில் உள்ள, இலங்கை வங்கிக் கிளையில், பின்பக்கத்தில் உள்ள இரும்பு யன்னலை 20 திகதி இரவு 9:45 மணியளவில் கழற்றிக்கொண்டு, வங்கிக்குள் நுழைந்த சந்தேகநபர்கள் இருவர்,  அங்குள்ள, தன்னியக்க பணப்பரிமாற்றும் (ஏ.டி.எம்) இயந்திரத்தை உடைத்து, அதிலிருந்து பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில், சுத்தம் செய்வதற்காக வங்கிக்கிளை, இன்று திறக்கப்பட்டது. இந்நிலையில் வங்கிக் கட்டத்துக்கு அருகாமையில் உள்ள, வர்த்தக கட்டடத்தில் பொறுத்தப்பட்டிருந்த, தன்னுடைய சி.சி.ரி.வி கமெராவில், 20 ஆம் திகதியன்று இரவு பதியப்பட்ட, காட்சிகள் தொடர்பில் சந்தேகம் கொண்ட, அக்கட்டடத்தின் உரிமையாளர். அவைதொடர்பில், வங்கியின் முகாமையாளரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்.

அதன் பின்னர் பொலிஸார் மேற்கொண்ட, விசாரணைகளின் போதே, வங்கியின் சி.சி.ரி.வி கமெரா தொகுதியையே முழுமையாக திசைதிருப்பப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதுடன் அந்த வங்கியின் சி.சி.ரி.வி பதிவு இயந்திரத்தையும் கொள்ளையர்கள் கழற்றிச் சென்றுவிட்டமையும் தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .