Lenin Raj / 2026 ஏப்ரல் 02 , பி.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

அரச நிறுவனங்களில் பணிகளை எதிர்வரும் 16 ஆம் மற்றும் 17ஆம் திகதிகளில் ஒன்லைன் (Online) ஊடாக முன்னெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய, அரச சேவையை முறைப்படி முன்னெடுத்துச் செல்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழு தீர்மானித்துள்ளது.
இந்தக் கூட்டம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இணையவழி (Online) ஊடாக நடைபெற்றது.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு மத்தியில், எரிபொருள் மற்றும் எரிசக்தியை சிக்கனமாகப் பயன்படுத்தி அரச சேவையைத் தடையின்றி முன்னெடுப்பதற்காக எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து இதன்போது ஆராயப்பட்டது.
அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்கள் தொடர்பில் அமைச்சுகளின் மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுவது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இதற்கமைய, சுகாதார மற்றும் ஊடக அமைச்சுகள் மார்ச் 31ஆம் திகதியளவில் டீசல் பயன்பாட்டில் 42% சேமிப்பை எட்டியுள்ளன. மின்சாரம் மற்றும் நீர் முகாமைத்துவத் திட்டங்களும் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
கல்வித் அமைச்சு ஏப்ரல் 7 மற்றும் 9ஆம் திகதிகளில் பாடசாலை மட்டத்தில் எரிசக்தி முகாமைத்துவம் குறித்த விழிப்புணர்வுத் திட்டங்களை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்கள் சாத்தியமான சந்தர்ப்பங்களில் ஒன்லைன் ஊடாகக் கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளன.
கிராம உத்தியோகத்தர் போட்டிப் பரீட்சை உள்ளிட்ட தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்பட்டதாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
போக்குவரத்து, டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் நீதி அமைச்சு உள்ளிட்ட பல அமைச்சுகள், அத்தியாவசிய ஊழியர்களைக் கொண்டு அல்லது ஒன்லைன் ஊடாகத் தமது சேவைகளைத் தடையின்றி வழங்கி வருகின்றன.
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago