2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

’அரசாங்கத்தால் ஒரு செங்கல் கூட எடுத்துவைக்கப்படவில்லை’

Niroshini   / 2021 ஜனவரி 29 , பி.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

தோட்ட தனி வீட்டு திட்டங்களுக்காக, இந்த ஆட்சியால் கடந்த ஒரு வருடத்தில் ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கப்படவில்லை என, கொழும்பு மாவட்ட எம்பியும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், இலங்கை, இந்திய அரசுகளின் உதவிகளை போராடி, கேட்டு, ஒப்பந்தம் செய்து, பெற்று, மலைநாட்டு தோட்டங்களில் தனி வீடுகள் கட்டி, அந்த வீட்டு குடியிருப்புகளை மலையகத்தில் தமிழ் பெயர்களில் புதிய மலையக தமிழ் கிராமங்களாக அடையாளப்படுத்தும் மலையக வரலாற்றின் எழுச்சி  பயணத்தை தமிழ் முற்போக்கு கூட்டணி நான்கே வருடங்களில் படிபடியாக ஆரம்பித்து முன்னெடுத்தாகத் தெரிவித்தார்.

தாம் விட்ட இடத்திலிருந்து, தமது பணியை தொடர வேண்டிய இந்த அரசாங்கம், தோட்ட தனி வீட்டு திட்டங்களுக்காக, கடந்த ஒரு வருடம், இரண்டு மாத காலத்தில்  ஒரு செங்கலை கூட எடுத்து வைக்கவில்லை எனவும், அவர் குற்றஞ்சாட்டினார்.

'வெறும் வாய் சவடால்களும், வெற்று அறிக்கைகளும், கனவு திட்ட அறிவிப்புகளும், எவருக்கும் விளங்காத அமைச்சரவை முடிவுகளும் என சும்மா காலத்தை இந்த அரசாங்க கும்பல் ஓட்டுகிறது. இதுதான் மலைநாட்டில் இன்றைய கசப்பான உண்மை. மனசாட்சி உள்ள எவருக்கும் இது விளங்க வேண்டும' எனவும், மனோ கணேசன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .