Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 செப்டெம்பர் 18 , பி.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
சௌபாக்கியம் மிக்க தேசமொன்றை உருவாக்குவோம் என தம்பட்டம் அடித்துக் கொண்டு வந்த அரசாங்கம்,போஷாக்குக் குறைபாடுகள் நிறைந்த நாட்டைக் கையகப்படுத்தியுள்ளதாகவும், போசாக்கின்மையால் நாடு தவிக்கும் வேளையில்,அரசாங்கம் மிகை ஊட்டச்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
அப்போது அநீதி இழைக்கப்பட்ட அனைவருக்கும் தனது கடமைகளை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என தற்போதைய ஜனாதிபதி அப்போது கூறியிருந்த போதும், ஐக்கிய தேசியக் கட்சிக்கார்களை குழிதோண்டிப் புதைத்த குற்றவாளிகளுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கி இன்று கடமையை நிறைவேற்றி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கம்பஹா மாவட்ட அத்தனகல்ல ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதிக் கூட்டத்தில் இன்று (18) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்தார்.
முழு நாடும் கடும் நெருக்கடியிலிருக்கும் போது அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் சக நிகழ்வுகளின் போது வாணவேடிக்கைகளை நடத்தி வருவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்தே அவர்கள் அந்தப் பதவிகளைப் பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.
மனிதாபிமான முதலாளித்துவத்தின் ஊடாக இந்நாட்டை கட்டியெழுப்ப முடியும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,அதற்காக ஐக்கிய மக்கள் சக்தி தம்மை அர்ப்பணிக்கும் எனவும் தெரிவித்தார். (a)
8 hours ago
16 Aug 2025
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
16 Aug 2025
16 Aug 2025