2025 மே 03, சனிக்கிழமை

அரசாங்கத்தில் பதவி: மைத்திரி அதிரடி

Freelancer   / 2022 செப்டெம்பர் 17 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்ட எம்.பிக்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாராகி வருவதாக அறியமுடிகிறது.

அவர்களை கட்சியின் பதவிகளில் இருந்து நீக்கிவிட்டு குற்றப் பத்திரிகையை சமர்ப்பித்து கட்சியின் உறுப்புரிமையை இடைநிறுத்த திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் விசேட கலந்துரையாடலொன்று கட்சி தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற போதே, இது குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரியவருகிறது.

அமைச்சரவை அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களாகவும், இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட லசந்த அழகியவன்ன கட்சியின் பொருளாளராகவும் செயற்படுகின்றனர். 

அத்துடன், கட்சி உறுப்பினர்களான சாமர சம்பத் தசநாயக்க மற்றும் ஜகத் புஷ்பகுமார ஆகியோர் பிரதிச் செயலாளர்களாக பணியாற்றி வருகின்றனர் என்பதுடன், அவர்கள் தமது பதவிகளில் நீக்கப்படுவார்கள் என தெரியவருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X