2025 ஜூலை 09, புதன்கிழமை

'அரசியல் நடவடிக்கைகளுக்கு இலவசமாக பஸ்களை வழங்க வேண்டாம்'

Editorial   / 2018 நவம்பர் 11 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் நடவடிக்கைகளுக்காக இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்களை  இலவசமாக வழங்க வேண்டாமென, போக்குவரத்து அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவருக்கு அறிவுறுத்தியுள்ளதாக, போக்குவரத்து அமைச்சர நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.

எவரும் பணத்தை செலுத்தி பஸ் வண்டிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அரசியல் நடவடிக்கைகளுக்காக, பொதுச் சொத்துக்களைப் பயன்படுத்த வேண்டா​மென்றும் சகல அரசியல் கட்சிகளிடமும் கோரிக்கை விடுப்பதாகவும் அமைச்சர நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்றரை வருடங்களில் இலங்கை போக்குவரத்து சபை நிதி வளர்ச்சியடைந்துள்ள நிலையில், மீண்டும் அரசியல் செயற்பாடுகளால் இந்த நிலைமையில் பாதிப்பு ஏற்படக் கூடாதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .