2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

அரிசி விலை மேலும் அதிகரிக்கும்

Freelancer   / 2022 செப்டெம்பர் 20 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் ஒரு கிலோ அரிசிக்கு இரண்டரை வீத சமூக பாதுகாப்பு வரி செலுத்த வேண்டியுள்ளதாகவும், இதன் காரணமாக அரிசி விலை மேலும் உயரும் என  அரிசி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் முடித் பெரேரா தெரிவித்துள்ளார்.

அரிசி விலை உயர்வைத் தடுக்க விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் அரிசிக்கான வரித் தொகையை குறைக்க வேண்டும்.

இலங்கையில் அரிசி உபரியாக இருக்கும் போதும் வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுகிறது.

கடந்த 2020/21 பருவத்தில் ஐந்து மில்லியன் மெட்ரிக் டொன் அரிசி உற்பத்தி செய்யப்பட்ட போதிலும், அரிசி இறக்குமதி செய்யப்பட்டதாகவும், இயற்கை விவசாயத்தின் காரணமாக அரிசி அறுவடை இல்லாததால் அரிசி இறக்குமதி செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .