2025 ஜூலை 09, புதன்கிழமை

அவசரமாகக் கூடுகிறது மு.கா

Editorial   / 2018 நவம்பர் 10 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் உயர்பீடம், நாளை (11) அவசரமாக கூடவுள்ளதாக, கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முஸ்லீம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினர், கடந்த சில தினங்களுக்கு முன்னர், உம்ரா சென்றிருந்த நிலையில், நாளை, நாடு திரும்பவுள்ளனர்.

நாடாளுமன்றம் நேற்று, நள்ளிரவு கலைக்கப்பட்ட நிலையில், எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆராயும் வகையில், இக்கூட்டம் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த கூட்டத்தில் கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள் உட்பட உயர்மட்டத்தரப்பினர் அனைவரும் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .