2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ஆசிரியர்களை பாடசாலைகளே பெற்றுக்கொள்ள புதிய சட்டம்

George   / 2017 பெப்ரவரி 01 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இனிவரும் காலத்தில், பாடசாலைக்குத் தேவையான ஆசிரியர்களைப் பாடசாலை மட்டத்தில் இணைத்துக் கொள்வதற்குச் சட்டமொன்றை உருவாக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அதன்காரணமாக, மாவட்ட மற்றும் ​தேசிய ரீதியில் ஆசிரியர்களைச் சேவையில் இணைக்கும் அவசியம் இருக்காது எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற தேசிய கல்வி நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு, உரையாற்றுகையில் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 13 வருட பாடசாலைக் கல்வியைக் கட்டாயமாக்குவதன் ஊடாக, உயர்தரப்பரீட்சைக்குச் சமமான உயர் பாடநெறிகள் பாடசாலைக்குள் நடத்தப்படும் என்றும், அதன்காரணமாக கற்பிப்பதற்கு அதிக ஆசிரியர்கள் தேவைப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .