Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 30 , மு.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாகாணப் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக உள்வாங்குவது தொடர்பிலான பிரேரணை மீதான விவாவதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்தாவது,
"ஒரு தொகுதியில் குறைந்தது இரண்டு பாடசாலையாவது தேசிய பாடசாலையாக மாற்றுவதன் மூலம் அப்பிரதேசத்தின் கல்வி வளர்ச்சிக்கு வழிவகுக்க முடியும். தேசிய பாடசாலைகள் இந்நாட்டின் கல்வித்தேவையில் முக்கியமான பங்களிப்பைச் செய்துவருகின்றன. அதேபோன்று, மாகாண பாடசாலைகளும் பெரிதும் பங்களிப்புச் செய்கின்றன. ஆனால், தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான, வளப்பற்றாக்குறை வேறுபாட்டின் காரணமாக, மாகாணப் பாடசாலைகள், தேசியப் பாடசாலைகளை போன்று மிளிர்வதற்குத் தவறிவிடுகின்றன,
"வடக்கு, கிழக்கு உள்ளிட்ட மற்றைய பகுதிகளில் உள்ள தமிழ்மொழிமூலப் பாடசாலைகளிலும் பாடவிதானங்களுக்கு போதியளவிலான ஆசிரியர் பற்றாக்குறை நிலவிவருகின்றது. ஆசிரிய வளப்பற்றாக்குறையானது பாடசாலைகளுக்குப் பெரும் பிரச்சினையாகவுள்ளது,
"அதுதவிர, உயர்தரபிரிவில் விஞ்ஞான, இணைகணித வகுப்புக்கள் இடை நிறுத்தப்பட்ட பாடசாலைகள் உள்ளதுடன், அப்பாடசாலைகளில் கலை, வர்த்தக பிரிவுகளில் மாத்திரமே உள்ளதால் மாணவர்கள் பெரும் பின்னடைவினை எதிர்கொள்கின்றனர். மத்திய அரசு இது தொடர்பில் கவனம் செலுத்தி பாடசாலைகளுக்கு தேவையான ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்கான விசேட திட்டத்தினையும் அரசாங்கம் அமுல் படுத்த வேண்டும்," எனக் கேட்டுக்கொண்டார்.
40 minute ago
9 hours ago
15 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
9 hours ago
15 Aug 2025