2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

ஆட்சியை கைப்பற்ற மஹிந்த வகுத்துள்ள திட்டம்!

Lenin Raj   / 2026 ஏப்ரல் 20 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த வருடம் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காகப் பாரிய திட்டம் ஒன்று உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்குப் பின்னர், நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் பணிகளை ஆரம்பித்து வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அரசியல் மாற்றத்திற்குத் தமது கட்சி தயாராக இருப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ இங்கு குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை மே தினம் பௌர்ணமி தினத்தன்று வருவதால், தமது கட்சி மே தினத்தைக் கொண்டாடாமல் சமய நடவடிக்கைகளில் ஈடுபடும் எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .