2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஆர்ப்பாட்டங்களுக்கு 2 இடங்களை ஒதுக்க நடவடிக்கை

Kanagaraj   / 2017 ஜனவரி 16 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்ப்பாட்டம் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு, கொழும்பு மற்றும் நாடாளுமன்றத்துக்கு அண்மித்த பகுதியில் இரண்டு, இடங்களை ஒதுக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுது;துள்ளது.

கொழும்பு, கோட்டை மற்றும் புறக்கோட்டை, நாடாளுமன்றத்துக்கு அண்மித்த பகுதிகளில் அவ்வப்போது, எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதனால், பொதுமக்கள் பல்வேறான அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துவருகின்றனர். இந்த நிலைமையை இல்லாமற் செய்வதற்கே, அரசாங்கம் மேற்கண்டவாறு தீர்மானத்தை எடுக்க உள்ளதாக அறியமுடிகின்றது.

அதனடிப்படையில், கொழும்பு மற்றும் நாடாளுமன்றத்துக்கு அண்மையில், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவேண்டிய இரண்டு இடங்களை, வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக வெளியிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வர்த்தமானி அறிவித்தல் வெளியானதன் பின்னர், சகல எதிர்ப்பு நடவடிக்கைகளும் இவ்விரு இடங்களில் மட்டுமே வரையறை படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க, அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .