Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2017 பெப்ரவரி 13 , மு.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அழகன் கனகராஜ்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின், 27ஆவது மாநாடு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், பென்குவேட் ஹோலில், கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நேற்று (12) நடைபெற்றது.
இதேவேளை, கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாத்தில் சனிக்கிழமை இரவு, கட்டாய அதியுயர்பீடக் கூட்டம் இடம்பெற்றது.இந்தக் கூட்டத்துக்கு, பஷீர் சேகுதாவூத் சமூகமளிக்கவில்லை. எனினும், ஹசன் அலி சமுகமளித்திருந்தார்.
அன்று, மாலை 6:40க்கு ஆரம்பமான உயர்பீடம் இரவு 9:45 மணிவரையிலும் சென்றது.
இதன்போது கருத்துரைத்த ஹசன் அலி, அதிகாரங்கள் இல்லாத செயலாளர் பதவியை தனக்கு தராவிடினும் பரவாயில்லை, வேறு எவருக்காவது வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் தெரிவித்தன.
எனினும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகத்துக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டமையைப் போன்று, சகல அதிகாரங்களையும் வழங்கும் வகையில் யாப்பில் மாற்றம் கொண்டுவருவதாகவும், கட்சியின் அனைத்து அதிகாரமும் கொண்ட செயலாளராக மன்சூர் எ காதரை நியமிக்கவுள்ளதாகவும் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன், கட்சியின் தவிசாளர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு, மு.காவின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உட்பட அதியுயர்பீட உறுப்பினர்கள் அனைவரும் ஹசன் அலியை கேட்டுக்கொண்டதாக அறியமுடிகின்றது,
அதற்கு மறுப்புதெரிவித்த ஹசன் அலி, உயர்பீட கூட்டத்திலிருந்து எழும்பி, தலைவர் ஹக்கீமை கட்டியணைத்து ஆரத்தழுவிவிட்டு, கலங்கிய கண்களுடன் கட்சியின் தலைமையகமாக தாருஸல்லாமிலிருந்து வெளியேறியதாக அந்த தகவல் தெரிவித்தது.
அவருடன் சேர்ந்து இன்னும் 10 அல்லது 12 உறுப்பினர்களும், கல்கிஸையில் உள்ள ஹசன் அலி வீட்டுக்கு சென்றுவிட்டனர். இந்நிலையில், கட்டாய உயர்பீடக் கூட்டத்தை உத்தியோகபூர்வமாக முடிக்காமல், ரவூப் ஹக்கீமும், ஹசன் அலியின் வீட்டுக்கு பறந்துள்ளார். அவருடன் இன்னும் 10 அல்லது 15 உறுப்பினர் சென்றுள்ளனர்.
அங்குவைத்து சுமார் ஒரு மணிநேரமாக, இரு தரப்பினருக்கும் இடையில், கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும், பேராளர் மாநாட்டுக்கு வருகைதருமாறு ஹசன் அலியை, ஹக்கீம் தரப்பு அழைத்ததாகவும், அதற்கு, ஹசன் அலி மறுத்துவிட்டதாகவும் அறியமுடிகின்றது.
5 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
8 hours ago