2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

ஆளுநர்களுக்கு புதிய பொறுப்புகள்

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 10 , பி.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாகாண சபைகள் இயங்காத பின்னணியில் மாகாண நிர்வாகம் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான மாகாண சபையின் செலவுகளை முகாமைத்துவம் செய்வது தொடர்பான பொறுப்பு மாகாண ஆளுநர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவால் சகல மாகாண ஆளுநர்களுக்கும் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சவால் மிக்க காலப்பகுதிக்குள் அரச செலவுகளை முகாமைத்துவம் செய்து மக்கள் சேவைகளை சிறந்த முறையில் நடத்திச்  செல்வது அவசியம் என்று கருதி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மாகாண சபை நிர்வாகம், அபிவிருத்தி பணிகள் மற்றும் மாகாண சபை செலவுகளை முகாமைத்துவம் செய்யும் போது, தேசிய கொள்கை மற்றும் முன்னுரிமைகளுக்கு ஏற்ப மற்றும் மக்களின் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் மிகவும் முக்கியம் என்றும் அக்கடித்தில் தெரிவிக்கபட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X