Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 பெப்ரவரி 01 , மு.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவரின் உத்தியோகபூர்வ அலுவலகத்துக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது.
அந்த அலுவலகத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த, முன்னாள் தலைவருக்கு உரித்துடைய ஆவணங்கள் சில மற்றும் கணினித் தரவுகள் சில காணாமல் போன சம்பவத்தையடுத்தே, உடன் அமுலுக்கு வரும் வகையில் அந்த அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு புதிய தலைவராக சட்டத்தரணி நதுன் பெர்ணான்டோ, கடந்த வெள்ளிக்கிழமையன்றே நியமிக்கப்பட்டார். எனினும், முன்னாள் தலைவரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் சிலர், கடந்த சனிக்கிழமையிலிருந்து அந்தக் காரியாலத்துக்கு வந்துசென்றதாக அறியமுடிகின்றது. அந்த அலுவலகத்துக்கு வந்திருந்தவர்களே, அங்கிருந்த ஆவணங்கள் சிலவற்றையும் கணினி தரவுகள் சிலவற்றை எடுத்துச்சென்றுவிட்டதாக அறியமுடிகின்றது.
புதிய தலைவராக நியமிக்கப்பட்ட சட்டத்தரணி நதுன் பெர்ணான்டோ, தனது கடமைகளை உத்தியோபூர்வமாக நேற்று பொறுப்பேற்கவிருந்தார். இந்நிலையில், ஆவணங்கள் மற்றும் கணினி தரவுகள் களவாடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முடுக்கிவிடப்பட்டுள்ளன.
6 hours ago
16 Aug 2025
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
16 Aug 2025
16 Aug 2025