2025 ஜூலை 09, புதன்கிழமை

இ.போ.ச கட்டணமும் குறைப்பு

Editorial   / 2018 நவம்பர் 08 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் கட்டணத்தைக் குறைப்பதற்கு, இலங்கைப் போக்குவரத்துச் சபை தீர்மானித்துள்ளது.

இதன் பிரகாரம், இன்று நள்ளிரவு முதல், இரண்டு சதவீதத்தால் பஸ் கட்டணம் குறைக்கப்படவுள்ளது.

எவ்வாறாயினும், ஆகக் குறைந்த பஸ் கட்டணமான 12 ரூபாயில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்படா நிலையில், ஏனைய கட்டணங்களை, 2 சதவீதத்தால் குறைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சினால், டீசலின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையிலேயே, பஸ் கட்டணத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்​ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .