2025 ஜூலை 03, வியாழக்கிழமை

இடைக்கால கணக்கறிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்

Editorial   / 2018 டிசெம்பர் 21 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால கணக்கறிக்கைக்கு தாம் ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக,ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இடைக்கால கணக்கறிக்கை நிறைவேற்றப்படாதுவிட்டால், அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்கமுடியாது போகுமென, அவர் சுட்டிக்காட்டினார்.

பிணைமுறிகள் போன்று, தவறான பல்வேறு செயற்பாடுகள் கடந்த ஆட்சியில் இடம்பெற்றிருந்ததாக கூறிய அவர், வேறு சில நல்ல செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டனவெனவும் கூறினார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சிறிய கட்சியாக வலுவிழந்து வருவதாக கவலை தெரிவித்த அவர், எதிர்வரும் காலங்களில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்  கட்சியை வலுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர கூறினார்.

 
புதிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நல்லபல விடயங்களுக்கு நாம் ஆதரவளிப்போம் என்று தெரிவித்துள்ள மஹிந்த அமரவீர எங்களுக்கென்று தனித்தனி கட்சிகள் இருக்கின்றன. அவற்றை பலப்படுத்திக்கொண்டு முன்னோக்கி பயணிக்கவேண்டும் என்பதுடன், இந்த இடைக்கால கணக்கறிக்கைக்கு நாம் பூரண ஆதரவளிப்போம் என்றார். 


ஒக்டோபர் 26 ஆம் திகதிக்குப் பின்னரான நடவடிக்கைகளினால், ஐக்கிய தேசியக் கட்சி பலமடைந்துள்ளதாக சிலர் தெரிவிக்கின்றனர். ஆனால், எங்களை பொறுத்தவரையில் நாங்கள் பின்னடைவை சந்தித்துவிட்டோம் என்றார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .