2025 ஜூலை 09, புதன்கிழமை

‘இடைக்கால தடையுத்தரவை எதிர்பார்க்கின்றோம்’

Editorial   / 2018 நவம்பர் 13 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயர்நீதிமன்றில்  ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பில் உயர்நீதிமன்றத்தால் இடைக்காலத் தடையுத்தரவு கிடைக்குமென எதிர்பார்ப்பதாக முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இன்று உயர்நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரதி மனுதாரர்களுக்கு வழக்கு சம்பந்தமான அறிவிப்பும், இடைக்கால தடையுத்தரவு கிடைக்குமென நாம் எதிர்பார்க்கின்றோம் என்றும், ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

சட்டமா அதிபர் அரசு , ஜனாதிபதி சார்பில் தனது வாதப்பிரதிவாதங்களை முன்வைத்ததாகவும்,இதனடிப்படையில் அவர் அரசமைப்பின் வெவ்வேறு உறுப்புரைகளை தனித்தனியாக, அர்த்தம் கற்பிப்பதற்கு முயற்சிக்கின்றார் என்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .