Freelancer / 2024 டிசெம்பர் 23 , மு.ப. 01:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மீனவர்களால் கைது செய்யப்படுகின்ற இந்திய மீனவர்களை உடடினயாக விடுதலை செய்யவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை - கலைஞர் அரங்கில் திராவிட முன்னேற்றக் கழக செயற்குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (22) நடைபெற்ற போது இந்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
இதன்போது, இந்திய மீனவர்களை கைது செய்து அவர்களின் படகுகளைப் பறிமுதல் செய்வது அவர்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கும் விடயம் என குறித்த செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்படும் இந்திய மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றங்களில் விதிக்கப்படும் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் என்பன இரண்டு நாடுகளுக்களுக்கும் இடையிலான நட்புறவை சீர்குலைக்கும் விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போது இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவித்து அவர்களது படகுகளையும் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழக முதலமைச்சரிடம் இதன்போது தி.மு.க செயற்குழு கூட்டம் கோரிக்கை விடுத்துள்ளது. (a)

9 hours ago
09 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
09 Feb 2026