Freelancer / 2026 பெப்ரவரி 13 , மு.ப. 08:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான குழுவினருக்கும், யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளிக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில், இந்திய இழுவைமடிப் படகு மீனவர்களால் நயினாதீவு மீனவர்கள் எதிர்நோக்கும் இடர்பாடுகள் குறித்தும், அதனால் ஏற்படும் பொருளாதார இழப்புகள் பற்றியும் இந்திய துணைத் தூதுவருக்குத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்திய அரசின் நிதியுதவியுடன் நயினாதீவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சூரியகல மின் உற்பத்தித் திட்டம், அதனுடன் தொடர்புடைய வீதி அபிவிருத்தி, வங்களாவடி மற்றும் துறைமுக அபிவிருத்திகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது. (a)

19 minute ago
33 minute ago
43 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
33 minute ago
43 minute ago
48 minute ago