Editorial / 2021 பெப்ரவரி 15 , மு.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் செயலகம்சார் இந்தியப் பணியாளர் ஒருவருக்கு, 13 ஆம் திகதி பெப்ரவரி 13ஆம் திகதியன்று, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தால் கூறப்பட்டிருக்கும் வழிகாட்டுதல்களுக்கு அமைவாக, குறித்த பணியாளர் இலங்கை அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட மருத்துவ மையம் ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த உத்தியோகத்தரின் குடும்ப அங்கத்தவர்களும் இந்த வழிகாட்டுதல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அறிவித்துள்ளது.
குறித்த உத்தியோகத்தரின் கடமைகளுக்கு அமைவாக, அவர் பெரும்பாலான உயர் ஸ்தானிகராலய பணியாளர்களுடன் மட்டுப்படுத்தப்பட்ட தொடர்பைக் கொண்டிருக்கும் அதேவேளை, உத்தியோகபூர்வ பணிகள் நிமித்தம், வெளியாட்களுடன் தொடர்புகள் எதையும் கொண்டிருக்கவில்லை.
உயர் ஸ்தானிகராலய வளாகம், தொற்று நீக்கப்பட்டிருக்கும் அதேவேளை, உரிய நெறிமுறைகளுக்கு அமைவாகத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கொவிட்-19 நோய்நிலைமை காரணமாக, உயர் ஸ்தானிகராலயம் குறைந்த வலுவுடன் இயங்கிவரும் அதேவேளை, சுழற்சி முறையிலான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
வினைதிறன் மிக்க வகையில், கொவிட்- 19க்கு எதிராகப் போராட, இலங்கைக்கு சகல சாத்தியமான வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிச் செயற்படுவதற்கு, இந்தியா உறுதிபூண்டுள்ளது என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
14 minute ago
59 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
59 minute ago
3 hours ago