2026 மே 04, திங்கட்கிழமை

இந்தியாவில் ஒரே நாளில் 40 ஆயிரத்தை தாண்டிய தொற்று

Editorial   / 2020 ஜூலை 20 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில், இதுவரை இல்லாத அளவில், கடந்த 24 மணி நேரத்தில் 40,425 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. 

இதில் 81 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் முதன்முறையாக கொரோனா வைரஸ்  தொற்று, 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,18,043 ஆகவும், மரணம் 27,497 ஆகவும் அதிகரித்துள்ளது. 

கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் சதவீதம் 61.61 சதவீதமாக உள்ளதாகவும், தற்போது வரை 7 இலட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மஹாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இதற்கடுத்த இடங்களில், தமிழகம், டெல்லி, கர்நாடகா, ஆந்திரா, உ.பி., மற்றும் குஜராத் மாநிலங்கள் உள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .