2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

இன்று பாதயாத்திரை

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 14 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

'சிறிய இதயத்துக்கு சுகம் தாருங்கள்'  என்ற மனிதநேயத்துக்கான பாத யாத்திரை, இலங்கை சிறுவர்நோய் நிபுணர்களின் நிறுவனத்தால் கொழும்பில் இன்று (14) நடத்தப்படவுள்ளது.

இதய நோய்களினால் வருடாந்தம் மரணிக்கும் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக, லேடி ரிச்வே சிறுவர் வைத்தியசாலையுடன் இணைந்து, முழுமையான வசதிகளை கொண்ட இதய அறுவைச் சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவினை உருவாக்குவதற்கான நிதியைத் திரட்டுவதற்கே, இந்தப் பாதயாத்திரை நடத்தப்படவுள்ளது.

இந்நிகழ்வு, இன்று காலை 8 மணிமுதல் பிற்பகல் 5 மணிவரை, கொழும்பின் பல பிரதேசங்கள் உள்ளடங்கும் வகையில் நடாத்தப்படவுள்ளது.  கோட்டை ரயில் நிலையத்தில் ஆரம்பமாகும் இந்த பாதயாத்திரை,  பொரளை கெம்பல் மைதானத்தில் நிறைவடையும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X