2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இனந்தெரியாத ஈயினால் இரத்மலானை மக்கள் பாதிப்பு

Gavitha   / 2017 ஜனவரி 16 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்மலானையிலுள்ள வீட்டுப் பூந்தோட்டம், கடற்கரை, வீடுகளில் மிக வேகமாகப் பரவி வரும் ஒரு வகையான ஈக்கள் காரணமாக, குறித்த பகுதியிலுள்ள மக்கள், சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.  

இது, பொதுமக்களின் சுகாதாரத்துக்குத் தீங்கு விளைவிக்கும் ஈ வகை என்று, தெஹிவளை, கல்கிஸை மாநகர சபையின் தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.  

இந்தக் ஈக்கள், கடற்கரையோரங்களில் உள்ள புற்களுக்கு அடியில் இருப்பதாகவும், அவ்வழியே நடந்து செல்வோர் கொடுக்கினால் கொட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வீட்டிவுள்ள யன்னல், கதவு, கண்ணாடி, தளபாடங்கள் போன்ற அனைத்து இடங்களிலும் இந்த ஈ இருப்பதாகவும், இந்த ஈ யின் தாக்குதலினால் பாதிப்புக்குள்ளான சிறிய பிள்ளைகள், களுபோவில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

இந்த ஈக்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .