Freelancer / 2026 பெப்ரவரி 05 , மு.ப. 08:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தனது வானிலை முன்னறிவிப்பில் தெரிவித்துள்ளது.
வடக்கு, வட மத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஊவா மாகாணத்திலும், மட்டக்களப்பு, அம்பாறை, ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுகின்றது.
சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிக மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. (a)
7 minute ago
22 minute ago
36 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
22 minute ago
36 minute ago
46 minute ago