Editorial / 2021 ஜனவரி 29 , மு.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு இலவசமாக வழங்கப்பட்ட, கொரோனா வைரஸ் தடுப்பூசியை ஏற்றும் நடவடிக்கைகள், இன்றிலிருந்து ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி செயலகம், மேல் மாகாணத்தில் ஆறு வைத்தியசாலைகளில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்திய அரசாங்கம் வழங்கிய கொவிட்-19 நோய் தடுப்புசிகளின் முதல் தொகுதி, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவால், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் உத்தியோகபூர்வமாக நேற்று (28) கையளிக்கப்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷஇ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் விடுத்த வேண்டுகோளின் பேரில் தடுப்பூசிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன.
இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகா கோவிஷெல்ட் ((AstraZeneca COVISHELD)) கொவிட்-19 தடுப்பூசி மும்பாயில் உள்ள சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.
500,000 தடுப்பூசிகளுடன் இந்திய விமான சேவைக்கு சொந்தமான AI 281 விமானம், நேற்று முன்தினம் (27) முற்பகல் 11.45 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
விமானத்தின் விசேட குளிரூட்டியில் களஞ்சியப்படுத்தப்பட்டு கொண்டுவரப்பட்ட தடுப்பூசியின் எடை 1,323 கிலோ கிராமாகும். இத்தடுப்பூசிகள் விமான நிலைய வளாகத்தில் உள்ள குளிரூட்டியில் களஞ்சியப்படுத்தப்பட்டு, குளிரூட்டப்பட்ட வாகனங்களின் மூலம் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இத்தடுப்பூசிகள் 2 பாகைக்கும் 8 பாகைக்கும் இடைப்பட்ட டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன.
தடுப்பூசி ஏற்றல் மேல் மாகாணத்தின் 06 முக்கிய மருத்துவமனைகளில் இன்று (29) ஆரம்பிக்கப்படும். கொவிட்-19 தடுப்பு நடவடிக்கையில் முன்னின்று செயற்படும் சுமார் 150,000 சுகாதாரப் பணியாளர்கள், 120,000 முப்படையினர், பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையில் உள்ளவர்களுக்கு முதலில் தடுப்பூசி ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'தடுப்பூசி ஏற்றிக்கொள்வது தனிநபர்களின் சுயாதீனமான முடிவாகும். அதை விரும்பாதவர்கள் ஏற்றிக்கொள்ளாதிருக்க முடியும்' என கொவிட்-19 தடுப்பூசி கொள்முதல் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவரும் ஜனாதிபதியின் தலைமை ஆலோசகருமான லலித் வீரதுங்க தெரிவித்தார்.
30 minute ago
3 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
3 hours ago
3 hours ago
5 hours ago